2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கடற்படையினரால் கடற்றொழிலாளர்கள் சிரமம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதன் காரணமாக, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பிறவழியூடாக கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எழுபது வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் கடற்றொழிலையே நம்பியுள்ளனர். இக்குடும்பங்கள் கடற்றொழில் புரிவதற்கு இவ் இறங்குதுறை முக்கியமானதாகும்.

ஆனால் கடற்படையினர் இவ் இறங்குதுறையில் நிலைகொண்டிருப்பதன் காரணமாக தொழிலுக்குச் செல்லும்போது நீண்டதூரம் சென்று கடலில் இறங்கவேண்டியுள்ளதாகவும் இறங்குதுறையிலிருந்து கடற்படையினரை இடமாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலர், பிரதேச செயலாளர், பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .