2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கோணாவிலில் போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, வியாபாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி - கோணாவில் பகுதி மக்களால், இன்று (06) முற்பகல் 10.30 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

முன்னதாக, கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றுகூடிய அப்பகுதி மக்கள், ஊற்றுப்புலம் சந்தி வரை பேரணியாகச் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மு.சந்திரகுமார் கலந்துகொண்டார்.  இதன்போது அவரிடம் பிரதேச மக்களால், மகஜரொன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--