Editorial / 2017 ஜூன் 03 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
'கிளிநொச்சிக் கரச்சி பிரதேச சபையின் பணியாளர்கள் தமது வரவினை உறுதிப்படுத்துவதற்காக பொருத்தி வைக்கப்பட்டிருந்த கைரேகை பதிவுக் கருவியைக் காணவில்லை" என, கரச்சி பிரதேச சபைச் செயலாளரால், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை வேலை முடிவடைந்து வீடு செல்லும் பொழுது பணியாளர்களால் வெளியேறுவதற்கான கைவிரல் அடையாளம் பதியப்பட்டது எனவும் இன்று காலையில் பார்க்கும் பொழுது அக் கருவியினைக் காணவில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
25 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
25 minute ago
40 minute ago
52 minute ago