Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
அபிமான சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில், சைல்பண்ட ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன், , புதுக்குடியிருப்பு கோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 25 பாடசாலைகளுக்கு கற்றல் மற்றும் இணைபாட விதான உதவி வழங்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு கோட்டத்தில் சிவனகர் தமிழ் வித்தியாலத்தில் பாடசாலை முதல்வர் சிவராணி தங்கமயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ர உதவிசெயலாளர் அஞ்சலிதேவி சாந்தசீலன், முல்லைத்தீவு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் ம.பிரதீபன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா, வடமாகண உளசமூக வளநிலைய உதவி முகாமையாளர் உதயகலா சிவபாலசுந்தரம், அபிமான நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜெயவிலால் கஸ்தூரி ஆராச்சி, சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு கேட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியேஸ்வரன், சைன்பண் நிறுவத்தின் திட்ட உத்தியோகத்தர் சுபாஸ், முல்லை கல்வி வலய தமிழ் பாடவளவாளர் சி.பீதாம்பரம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதன்போது சிவநகர் தமிழ் வித்தியாலயத்தில் அபிமானசமூக அபிவிருத்தி நிறுவத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்டட இடைக்கால மண்டபம் திறந்துவைக்கப்பட்டதுடன், அருகில் உள்ள பாடசாலைகள் சிலவற்றுக்கான கற்றல் மற்றும் இணைபாடவிதான உபகரண்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டன.
5 minute ago
10 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
18 minute ago
25 minute ago