Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட கல்லாறு கிராமத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையினால் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் நூற்றக்கும் மேற்பட்டகுடும்பங்கள் வேறு இடங்களிற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளன.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர்பிரிவின் கீழுள்ள கல்லாறு கிராமத்தில், கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தின்போது, பாதிக்கப்பட்ட 150 வரையான குடும்பங்களுக்கும் அதன் பின்னர் கண்டாவளைப்பிரதேசத்தில் காணிகளின்றி வாழ்ந்த 100 வரையான குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு 250 க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு, மக்கள் குடியேற்றப்பட்டபோதும், இப்பகுதிக்கான உட்கட்டமைப்பு வசதிகள் குடிநீர் வசதிகள் எவையும் செய்யப்படாமையினாலும், தொழில் வாய்ப்புக்களின்மையாலும், இங்குள்ள குடும்பங்கள் வசதி வாய்ப்புக்களை தேடி வேறு இடங்களிற்கு செல்கின்றன.
குறிப்பாக 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் குடியமர்த்தப்பட்ட 100 குடும்பங்களில் 23 வரையான குடும்பங்களும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் 75 வரையான குடும்பங்களும் மாத்திரமே தற்போது வாழந்து வருலதாகவும், சுமார் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் ஆட்கள் இல்லாத வீடுகளாகவே காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இப்பகுதியில் வாழும் குடும்பங்கள் எதுவித தொழில் வாய்ப்பக்களும் இன்றி வாழ்ந்து வருவதுடன்,
பாடசாலை கட்டட வசதிகளால் நிறைவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஆசிரிய வளம் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றது.
இவ்வாறு வசதி வாய்ப்புக்கள் இன்யைமால் இப்பகுதி மக்கள் வேறு இடங்களிற்கு செல்கினற நிலையில் ஆட்கள் இல்லாத வீடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
இவ்வாறு ஆட்களற்ற வீடுகளில் பல்வேறு சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வருவதுடன் இவ்வாறான வீடுகளுக்கு அருகில் வாழ்வோர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே கல்லாறு கிராமத்தில் தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago