2021 ஜனவரி 27, புதன்கிழமை

கல்வி நிலையங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

Sudharshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்;ள தனியார் கல்வி நிலையங்கள், வடமாகாணத்தில் முன்னூதாரணமாக இருக்க வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.ஜெயராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் கூறுகையில்,

'மாவட்ட நீதிமன்றின் ஆலோசனைக்கு அமைவாக தனியார் கல்வி நிலையங்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தப்படுகின்றது' என்றார்.

தனியார் கல்வி நிலையங்களின் வகுப்புக்கள் மற்றும் பிரத்தியோக வகுப்புக்கள் நடத்துவதற்கான நேரங்கள், கட்டண அறவீடுகள், குடிநீர் வசதி, மலசலகூட வசதி, வகுப்பறை வசதி, சிறுவர் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் வியாபார உரிமம் பெறுதல் தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

                 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .