2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் கத்தியால் குத்தியவர் மரணம்

எஸ்.என். நிபோஜன்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதில் உள்ள தனியார் உணவக விடுதியின் மதுபானசாலையில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தியவரை இருவர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர் கத்திக் காயத்துக்கு இலக்கானவரும் அடிகாயத்துக்கு இலக்கானவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கத்தியால் குத்தியவரும் அடிகாயத்துக்குள்ளானவருமான தேவசிங்கம் தீறன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரைத்தாக்கிய இருவரில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--