2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் சந்திப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்  

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவின் பிரதானியான அந்தோனி எப் ரென்ஸ்சுள்ளி அவர்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கிடையிலான சந்திப்பொன்று, கிளிநொச்சியில் உள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.

இதன் போது, இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, ஜெனீவா விடயம், அதிகரித்த வேலையின்னை, முதலீடுகளின் தேவை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம்  கண்டறியப்படல் வேண்டும் என்பதோடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு நீதி வழங்கப்படுகின்ற அதேவேளை நட்டஈடும் வழங்கப்படல் வேண்டும் எனவும், தான் வலியுறுத்தியதாக, முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பெருமளவான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பின்றி காணப்படுவதாகவும் இதனால் சமூக சீர்குலைவுகள் இடம்பெறுகிறது.

எனவே, கடந்த காலத்தில் அமெரிக்க நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் போன்று  தொழில் வாய்ப்புகளை வழங்க கூடிய முதலீடுகள் அவசியம் என்றும் தெரிவித்தாக, அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .