2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

குளத்தில் நீராட முடியவில்லை

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, வட்டக்கச்சி மம்மில் குளத்தைச் சுற்றி மாயவனூர் கிருஸ்ணர் ஆலய நிர்வாகத்தினரால் வேலி அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் அந்தக் குளத்தில் நீராட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குளத்தில் மாயவனூர் கிராமத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் நீராடி வந்தனர். வேலி அடைக்கப்பட்டமையால், மேற்படி குடும்பங்கள் நீராட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வரட்சியான காலத்தில் இவ்வாறு செய்தமையால், தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .