2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஏலவிற்பனை

Niroshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதிமன்றத்திலிருந்த வாகனங்களின் பழைய இரும்புகள் 2.46 மில்லியன் ரூபாய் (24 இலட்சத்து 63 ஆயிரத்து 660 ரூபாய்) பெறுமதிக்கு ஞாயிற்றுக்கிழமை (13) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்ட வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் விடப்பட்டிருந்தன. அவ்வாறு விடப்பட்ட வாகனங்களே பழைய இரும்புக்கு இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன.

மோட்டார் சைக்கிள்களே அதிகளவு ஏலத்தில் விடப்பட்டன. ஏலத்தை நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நடத்தியது. ஏலத்தில் எடுத்தவர்கள் உடனேயே பணத்தைச் செலுத்தி பொருட்களை எடுத்துச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .