2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி வேண்டும்

Princiya Dixci   / 2016 ஜூலை 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தேவைக்கு மாதாந்தம் 200 பைன் குருதி சராசரியாக தேவைப்படுகின்ற போதும், குருதி கிடைக்காமையால் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஓ பிளஸ் மற்றும் பி பிளஸ் குருதி வகைகளுக்கு கூடுதலான தேவை இருக்கின்றது. குருதி வங்கியில் குருதி இருப்பில் இல்லாமல் உள்ளது.

குருதி வங்கியின் அவசர வேண்டுகோளுக்கிணங்க விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் கடந்த வாரம் குருதி தானம் வழங்கினர். இவ்வாறு குருதிக் கொடையாளர்களும் முன்வந்து குருதியை வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .