2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கிளி., முல்லைக்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்

Princiya Dixci   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக டபிள்யூ.எம்.ஆர்.எம்.வெலிகன்ன, தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை (11) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட பின்னர், சர்வமத பிரார்த்தனையுடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பொலிஸ் நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பொலிஸ் நிலையங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .