2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

சங்கிலி அறுத்த இராணுவ வீரர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - நெடுங்குளம் பகுதியில், வீட்டொன்றுக்குள் புகுந்து தங்க சங்கிலிகளை அறுத்தக் குற்றச்சாட்டில், 28 வயது இராணுவ வீரர் ஒருவர், வவுனியா குற்றதடுப்புப் பொலிஸாரால், இன்று (06) கைதுசெய்யபட்டுள்ளார்.

வவுனியா - நெடுங்குளத்தில் அரச விடுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரிடம், செவ்வாய்க்கிழமை (04) இலத்திரனியல் பொருள் ஒன்றை விற்பனைச் செய்து தருமாறும், நாளை (புதன்கிழமை) வந்து பணத்தைப் பெற்றுச் செல்வதாகவும், குறித்த இராணுவ வீரர் கூறியுள்ளார்.

இந்லையில், நேற்று (05) இரவு 10 மணியளவில், வீட்டின் ஜன்னல் வழியாக உட்புகுந்த குறித்த இராணுவ வீரர், குடும்பஸ்தர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியையும் அவரது குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுண் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .