Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட்
சிங்கள தேசிய கட்சிகளாகவும் எதிர்க் கட்சிகளாகவும் உதிரிக் கட்சிகளாகவும் இருந்து ஒருவரை ஒருவர் கருத்துக்களினால் தாக்கி வசைபாடிக் கொள்வதும் ஒரு விதமான ஒருவிதமான பேரினவாத இராஜ தந்திர நகர்வுகள் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.
இவ்வாறான குழப்ப நிலைகளை காரணம் காட்டி மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்வு விடயத்தில் வாய் திறக்காமல் அனைவரும் ஒரே முடிவையே எடுப்பார்கள் எனவும், அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மைத்திரிபால சிறிசேன எப்பொழுது நாங்கள் அரசியல் யாப்பை சமர்ப்பித்தோமோ அப்பொழுதே தனது கட்சியை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்னும் பொய் பெயரிலும் உருவாக்கி, அதை நாடாளுமன்றத்தில் அரசியல் யாப்புக்கு எதிராக இயங்க வைத்து மற்றைய பிரிவை அரசியல் யாப்பிற்கு ஆதரவு மாதிரி ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து இயங்க வைத்த ஒரு தந்திரவாதி என்றார்.
எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அவரது சொந்த கட்சியையே உருக்குலைத்த பெருமைக்குரியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரா?
யாரேனும் ஜனாதிபதியாக இருந்து விட்டு போங்கள், மக்களிடம் வாக்கு கேட்டு வருவதற்கு முன் தமிழ் மக்களின் அனைத்த பிரச்சினைகளுக்குமான தீர்வு என்ன? என்று கூறிவிட்டு தமிழ் பிரதேசங்களுக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக வரட்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
9 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
37 minute ago