Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 31 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
நீதித்துறையையும் நீதிபதியையும், சட்டத்தரணிகளையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள், இன்று வியாழக்கிழமை (31) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பில் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர்.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உட்பட உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .