Niroshini / 2016 மார்ச் 11 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வரும் பல்வேறு பிரச்சனைகளை வெளிக்கொணரும் முகமாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தது.
வவுனியா கமநலசேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட கற்குளம் கிராமத்திற்கான வீதி தீருத்தம் செய்யப்படாமை தொடுர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களத்தின் அதிகாhகிளுக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டபோதிலும் எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும்,
வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் மசாஜ் நிலையங்கள் உட்பட மதுபானசாலைகளினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது எடுத்துக்கூறப்பட்டது.
அத்துடன் பொதுவான வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஊடகசந்திப்பின்போது, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநதிகளால் ஊடகவிளயலர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
இதன்போது, இவ் அமைப்பின் இணைத்தலைவர்களான பூ. சந்திரபத்மன், சு. ஜெகதீஸ்வரன் (சிவம்), செயலளார் டொன் பொஸ்கோ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
25 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago