Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - அக்கராயன் - கெங்காதரன் குடியிருப்பு பகுதியில், வடக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் 4.5 மில்லியன் ரூபாய் செலவில் கரைச்சிப்பிரதேச சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் இரண்டு மாதங்களிலேயே செயலிழந்து விட்டதாகவும் தற்போது குடிநீருக்கு தாங்கள் தவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கெங்காதரன் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பெற்றுக்கொள்வதில் தினமும் சிரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின்கீழ் 4.5 மில்லியன் ரூபாய் செலவில் கரைச்சிப்பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சரால் கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட மேற்படி குடிநீர் விநியோகத்திட்டம், இரண்டு மாதங்களில் செயலிழந்துள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமது கிராமத்தின் தேவை கருதியும் தாங்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவும் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டம் செயலிழந்துள்ளமையால், தாங்கள் தொடர்ந்தும் குடிநீர் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
45 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago