2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

சுகாதார அலுவலர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு

Menaka Mookandi   / 2016 ஜூலை 08 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் இணைந்து சுகாதார அலுவலர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு  தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வொன்றை, கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) நடத்தியது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சிறுவர்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் நாளாந்தம் இடம்பெற்று வரும் நிலையில், சிறுவர்களின் பாதுகாப்பு  தொடர்பான வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக மட்டத்தில் பணியாற்றுகின்ற அலுவலர்களுக்கான விழிப்புணர்வு செயறிட்டம் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார குடும்ப நல .உத்தியோத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்கு மேற்படி வழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

ஒரு நாள் செயலமர்வாக இடம்பெற்றுள்ள சிறுவர்களின் உளநல பிரச்சினைகள் ,சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் நலன்கள்  உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர்  சத்தியசீலன், கிளிநொச்சி பதில் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம.ஜெயராசா, சிறுவர் நல உத்தியோகத்ர் செந்தூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .