George / 2016 மார்ச் 19 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய மடு மற்றும் ஈச்சளவக்கை பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு பெரியமடு தெளிவாறு பகுதியில் மேட்டு நில செய்கைக்கான காணிகள் உள்ளன. யுத்தத்துக்கு முன்பு அப்பகுதியில் மேட்டு நில பயிர்ச்செய்யை அந்த மக்களால் மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வந்தனர்.
யுத்தத்தின் பின்னர், அப்பகுதியில் மிதிவெடிகளின் அச்சுறுத்தல்களால் இன்று வரை மக்கள் மேட்டு நில செய்கையில் ஈடு படாமல் இருந்துவருகின்றனர். இதனால், தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.
தற்பொழுது அப்பகுதியில் சிலர் இன்று வரை அம்மக்களுக்குரிய நிலங்களில் மணல் அகழ்வினை மேற்கொண்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக புதன்கிழமை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன்போது,அங்கு மக்களுடைய காணிகளில் சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்டு மண் அகழ்வு செய்யப்பட்டுள்ளமையால் பாரிய பள்ளம் ஏற்ப்பட்டுள்ளமை காணமுடிந்தது. இது தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் சாள்ஸ் நிர்மலநாதன் கேட்டபோது,; அப்பகுதியிலுள்ள இருவருக்கு ஆற்றுப்படுக்கையில்; உள்ள 150 கியுப் மணலை அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குடியிருப்பு நிலங்களிலுள்ள மணலை அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் அரச அதிகாரிகளின் ஆதரவுடனே இந்த சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத மண் அகழ்வினை மேற்கொண்டு வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுத்து இதற்கான மாற்று வழிகளை பெற்றுத்தருமறு அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 minute ago
33 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
37 minute ago
2 hours ago