George / 2016 ஜூலை 16 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் ஆகிய பகுதிகளில் பாடசாலைகளுக்குச் செல்லாத 25 சிறார்கள் பிடிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக ஒரு சிறுவன் நன்னடத்தை பாடசாலையிலும் ஆறு சிறுவர்கள் சிறுவர் இல்லத்திலும் ஒரு சிறுமி, பாதுகாப்பு இல்லத்திலும் ஏனைய சிறுவர்கள் அவர்களது பெறறோர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
கிளிநொச்சி கோணாவில், யூனியன்குளம், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (15) மாவட்டச் செயலகத்தின் சிறுவர் உத்தியோகத்தர்கள் சிறுவர் மேம்;பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர்  நன்;னடத்தை அதிகாரிகள், கிராம அலுவலர், பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் பாடசாலைகளை விட்டு இடைவிலகிய 25 சிறார்கள் பிடிக்கப்;பட்டு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்;ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்;லாது பல்வேறு குற்றச்;செயல்;களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்;ற நிலையில் இவ்வாறான பாடசாலை செல்லாத சிறார்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் 75துக்கும் மேற்பட்ட சிறார்கள் இவ்வாறு பிடிக்கப்பட்டு கல்வி நடவடிக்கையில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago