Princiya Dixci / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மன்னார், சிலாவத்துறைக் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 29 பேரை மன்னார் கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை கைதுசெய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளார் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 6 டிங்கி படகுகள், 6 தொகுதி வலைகள், நீரில் முழ்கப் பயன்படுத்தும் முகக்கவசம் 5, 10 சோடி பாதணிகள் மற்றும் ஜீ.பி.எஸ். கருவி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான மீனவர்களும் சான்றுப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026