2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஜனன தின நிகழ்வு அனுஷ்டிப்பு

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில், சுவாமி விவேகாநந்தரின் 157ஆவது ஜனன தின நிகழ்வு , வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு முன்னால், இன்று (12) காலை நடைபெற்றது.

வவுனியா நகரசபையின் உப தவிசாளர் சு.குமாரசாமி தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி,டி,லிங்கநாதன், நகர சபை உறுப்பினர்களான நா.சேனாதிராயா, டி,கே.ராஜலிங்கம், சுமந்திரன், சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன், பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

இதன்போது வறுமைக்கோட்டுக்குட்பட்ட 10 குடும்பங்களுக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினரால், பொங்கல் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .