Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இந்தப் பூமியில், தமிழர்களுக்கான தனித்துவமான அடையாளத்தை மாவீரர்களே நிறுவியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நேற்று (23) நடைபெற்ற பளைக்கோட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 70 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை வேண்டி போராடி வருவதாகவும் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தை உலகமே வியக்கும் அளவுக்கு கொண்டு சென்றவர்கள் மாவீரர்களெனவும் தெரிவித்தார்.
தாம் இந்த மண்ணில் சுதந்திரமாகவும் அடிமைத்தனமற்றும் வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாசற்ற மறவர்கள் மாவீரர்களெனத் தெரிவித்த சிறிதரன் எம்பி, எந்தவோர் இராணுவமும் விடுதலை இயக்கமும் செய்திராத தியாகங்களையும் சாதனைகளையும் மாவீரர்கள் செய்திருக்கிறார்களெனவும் கூறினார்.
தமது இனத்தின் இன்றைய நிமிர்வுகளுக்கும் சாதனைகளுக்கும் அச்சாணிகளாக மாவீர்கள் திகழ்வதாகவும், அவர் கூறினார்.
6 minute ago
45 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago
1 hours ago
3 hours ago