2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

’தமிழர்களுக்கு மாற்றம் தேவை’

க. அகரன்   / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (20) மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த நான்கரை வருடமாக, தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள் என்றும் ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமானத் தேவை என்றும் அவர் கூறினார்.

தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு என்பது முக்கியமானது என்றும்  எதிர்காலத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கக் கூடிய வகையில், தங்களது எதிர்காலத்தை தாங்களே திட்டமிடக் கூடிய வகையில், தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை தாங்களே ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படல் ​வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆகவே ஒரே நாட்டுக்குள் அவ்வாறானதொரு அதிகாரப் பகிர்வு என்பது முக்கியமானதொரு விடயம் என்றும் எனவே, அபிவிருத்தி, அரசியல்தீர்வு ஆகிய இரண்டு விடயங்களையும் எவ்வாறு சமாந்தராமாகக் கொண்டு செல்வது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .