2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தமிழரசு கட்சியின் பிரசார கூட்டம்

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழரசு கட்சியின் முதலாவது பிரசார கூட்டம், வவுனியாவில் நேற்று நடைபெற்றது.

வவுனியா - வாடிவீட்டில் தமிழரசு கட்சியின் வேட்பாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வவுனியாவில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக பேசப்பட்டது.

இதில், வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் தணிகாசலம், வவுனியா நகரசபை உறுப்பினர்களான சேனாதிராஜா, சுமந்திரன், இராஜலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .