2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தவறான கணக்குப்போட்டவரும் போடச்சொன்னவரும் சிக்கினர்

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கல்வி பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையின் கணித பாடப் பரீட்சைக்கு, பரீட்சார்த்தி சார்பில் தோன்றி பரீட்சை எழுதிய சந்தேகநபர் ஒருவரை, பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, புதன்கிழ​மை (14) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலய பரீட்சை நிலையத்திலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் கணிதபாடப் பரீட்சையில் தோற்றி சித்திபெறத் தவறியவருக்கு பதிலாக, இந்த முறை அவரது பெயரில் மற்றுமொருவர் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து,  உண்மையான பரீட்சார்த்தியையும் கைது செய்துள்ள முல்லைத்தீவு பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக  கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .