2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தாயையும் சேயையும் காப்பாற்றிய இராணுவத்தினரின் இரத்தம்

Gavitha   / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயையும் சேயையும் காப்பாற்றுவதற்காக, 7 இராணுவ சிப்பாய்கள் தங்களது இரத்தத்தை கொடுத்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

புதன்கிழமை (25) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

முல்வைத்தீவு மெதவெல, சின்னக்குளம் மாஞ்சோலை வைத்தியசாலையில் கடந்த 19ஆம் திகதி 34 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவர், தானாகவே வைத்தியசாலைக்கு பிரசவத்துக்காகச் சென்றுள்ளார்.

இவருடைய உடல் நிலை ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளது. தாயையும் சேயையும் காப்பாற்றவேண்டுமானால், அவருக்கு (ழு Pழளவைiஎந ) ஓ பொசிடிவ் இரத்தம் மாதிரி தேவைப்பட்டுள்ளது. எனினும் குறித்த இரத்த மாதிரியின் அளவு வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குறைவாகவே காணப்பட்டுள்ளது.

எனினும், அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர், முல்லைத்தீவிலுள்ள 592ஆவது படைப்பிரிவின் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளார். உடனடியாக குறித்த இரத்த மாதிரியையுடைய 7 இராணுவ சிப்பாய்கள் அவர்களுடைய அதிகாரியொருவருடன் வைத்தியசாலைக்கு வந்து, 750 மில்லிலீற்றர் இரத்தத்தை தானம் செய்துள்ளனர்.

இரத்தம் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில், குறித்த தாய்க்கு குழந்தை பிரசவித்துள்ளது.

தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .