Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட எஸ்.கே.அறிவுச்சோலை கிளிநொச்சி பாரதிபுரத்தில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்புக்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்தது.
மேற்படி இல்லத்தை மீளவும் இயக்குவதற்கு நீண்ட காலமாக பலரும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இன்றைய தினம் முதல் மீண்டும் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினராகவும் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆளுநர் விசாகரூபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
55 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago