Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
வவுனியா, வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது.
குறித்த மலைப்பகுதியில் ஆதிலிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய இலிங்கம் காணப்படுவதுடன், தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதன பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன . கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன், ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே கடந்த சில வாரங்களாக பல அரசியல்வாதிகள் நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அந்த வகையில் நேற்று (09) நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன் , வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் , ஜீ.ரி.லிங்கநாதன் , தியாகராஜா , எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
4 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
14 minute ago