2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

‘நெருக்கடி நிலைமைக்கு முடிவு கட்டுங்கள்’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், பாடசாலைகளில் மரநிழல்களிலும் தகரக் கொட்டகைகளிலும் கல்வி பயில்கின்ற மாணவர்களின் நெருக்கடி நிலைமைக்கு முடிவு கட்டுங்கள் என, அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டின் பின்னர் பாடசாலைகள் மீள் குடியேற்றத்துடன் இயங்கத் தொடங்கியபோது, பல பாடசாலைகளில் தகரக் கொட்டகைகளிலும் மரநிழல்களின் கீழும் கல்வி பயில வேண்டிய நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக தகரக் கொட்டகைகளில் மாணவர்கள் கல்வி பயில முடியாத நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.

இதேபோன்று வகுப்பறைக் கட்டடங்கள் நெருக்கடி காரணமாக மரநிழல்களின் கீழ் மாணவர்கள் கல்வி பயில்கின்ற அவலம் காணப்படுகின்றது. இவை இரண்டுக்கும் விரைவில் முடிவு கட்ட வேண்டும்.

பாடசாலைகளில் நிரந்தரக் கட்டடங்களை அமையுங்கள். வளம் மிகுந்த மகிழ்ச்சிகரமான கற்பித்தலுக்கான வகுப்பறைகளை பாடசாலைகளில் உருவாக்கித் தாருங்கள் என மாவட்டத்தின் பல பாடசாலைகளின் பெற்றோர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X