Princiya Dixci / 2016 ஜூலை 18 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வரும் நிலையில் அதனை குழப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதயாத்திரையினை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்கள் நிதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற 'தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்' என்னும் தலைப்பிலான கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
எனினும், இராணுவம், அரச அதிகாரிகள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் சில அரசியல்வாதிகள் ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே விசுவாசமாக இருக்கின்றனர்.
ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அரசியல் கைதிகள் விடுதலை உட்பட சில பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தாமதம் இருக்கின்றது. தமிழ் மக்கள் நிதானமாகவும் பொறுப்போடும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago