2021 மே 06, வியாழக்கிழமை

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய வலய செயலணி கூட்டம்

George   / 2016 ஜூலை 30 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலய செயலணி கூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை  இ.செபமாலை அடிகளார் தலைமையில்  ஆறு போர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக நீதிமன்றங்களில் இடம்பெற்று வரும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் 6 மாதங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெற வோண்டும்.

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து சர்வதேசத்தின் தலையீட்டுடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு இவர்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதி குழுவினர் அழைக்கப்பட்டு விசார​ணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலகத்தை கொழும்பில் அமைக்க முடியாது எனவும், வடக்கில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றிலே அமைக்கப்பட வேண்டும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.

காணாமல் போன உயிர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க முடியாது எனவும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கப்பட்டதோடு சொத்து இழப்புகளுக்கு மாத்திரமே இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் மீண்டும் சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதும் பலருக்கு இதுவரை எவ்வித உதவித்திட்டங்களும் வழங்கப்படவில்லை என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

பலருக்கு பல வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.ஆனால் எங்களைப்போல் பலருக்கு எந்த​வொரு உதவித்திட்டங்களும்  வழங்கப்படவில்லை எனவும் குறித்த பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்ஸிம் மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், விசேட சட்டவாளர்களையும், நீதிபதிகளையும், உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை, மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான அலுவலகம்  போன்ற அலுவலகங்களை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதோடு மக்களின் கருத்துக்களும் பல்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .