2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

நீதிபுரத்தில் கசிப்பு; ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 11 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் நீதிபுரம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த கசிப்பு விற்பனை நிலையம், இன்று திங்கட்கிழமை (11) முற்றுகை செய்யப்பட்டு அதனை நடத்தி வந்த சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அங்கிருந்து 5 லீற்றர் கசிப்பு, 25 போத்தல் கோடா உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியிருந்து நீதிபுரம் பகுதிக்கு கசிப்பு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .