2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பாண்டியன்குளம் குளங்கள் புனரமைப்பு

Yuganthini   / 2017 ஜூலை 20 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு - பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள 9 நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் கால்வாய்களின் புனரமைப்புக்கு, 22.8 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் நாகராஜா சுஜீரூபன் தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் ஒருமைப்பாட்டுக்கான நல்லிணக்க அமைச்சின் 6.5 மில்லியன் ரூபாய், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 6.5 மில்லியன் ரூபாய், மீள்குடியேற்ற அமைச்சின் 15 மில்லியன் ரூபாயுடன், மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் நிதியுதவியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வடகாட்டுக்குளம், கிடாய்பிடித்தகுளம், கல்லிருப்புக்குளம், வன்னிவிளான் குளம், புதுக்குளம், சிராட்சி குளம், இளமருதங்குளம் மற்றும் தெகிழங்குளம் ஆகிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .