Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - மாங்குளம் ஏ9 வீதியில், இன்று (06) காலை, மாங்குளம் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சொகுசு காரொன்றில், புதையல் தோண்டும் அதிநவீன இயந்திரத்துடன் பயணித்த நால்வரைக் கைதுசெய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், பதுளை, பேருவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் இவர்களில் ஒருவர் ஓய்வுப் பெற்ற படை வீரர் எனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, மடிக்கணினி, ஸ்கானர் இயந்திரம், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2 minute ago
4 minute ago
8 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
4 minute ago
8 minute ago
10 minute ago