Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் - முக்கொம்பன் கிராமங்களுக்கு இடையிலான 3 கிலோமீற்றர் நீளமான வீதி, புனரமைக்கப்படாததன் காரணமாக, அப்பகுதியில் சேவையில் ஈடுபடுகின்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன.
கிளிநொச்சி டிப்போவில் இருந்து அக்கராயன், முக்கொம்பன் ஊடாக யாழ்ப்பாணம் வரை பஸ்கள் பணியில் ஈடுபடுகின்ற போது, குறித்த வயல் நிலம் ஊடான வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக பெருங்குழிகளில் பஸ்கள் பயணிக்கின்றன.
இதன் காரணமாக அடிக்கடி பஸ்கள் பழுதடைவதால் பயணிகளின் போக்குவரத்தில் தடை ஏற்படுகின்றது.
இதுதொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு நேரடியாகவும் மனுமூலமும் வீதியினைப் புனரமையுங்கள் என முக்கொம்பன் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இதுவரை வீதி புனரமைக்கப்படவில்லை.
இதன்காரணமாக, முக்கொம்பன் கிராமத்தில் வாழ்கின்ற 600 வரையான குடும்பங்கள், போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். வடமாகாண போக்குவரத்து அமைச்சர், வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முக்கொம்பன் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
27 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago