2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பம்பைமடு தடுப்பு முகாமுக்கு பயணிகள் கொண்டுவரப்பட்டனர்

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு, வௌ்ளிக்கிழமை மாலை 7 மணியளவில், 265 விமானப் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாள்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்துக்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், வௌ்ளிக்கிழமை வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பஸ்களில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் விமான பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

வவுனியா - பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கே தற்போது அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இச்செயற்பாட்டுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .