2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பயிர்ச் செய்கைக்கு தடையாகவிருக்கும் மண் அணைகள்

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், தச்சடம்பன் பகுதியில், பயிர்ச் செய்கை நிலங்களில் யுத்த காலத்தில் போடப்பட்;ட இராணுவ மண் அணைகள் அகற்றப்படாமையினால், பயிர்ச் செய்கை காலங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தச்சடம்பன் பயிர்ச் செய்கை நிலங்களை ஊடறுத்து, யுத்த காலத்தில் போடப்பட்ட இராணுவ மண் அணைகள், இதுவரை அகற்றப்படாமல் காணப்படுகின்றன. இவ்வாறான மண் அணைகள், பயிர்ச் செய்கை நிலங்களை ஊடறுத்துக் காணப்படுவதனால், பயிர்ச் செய்கைக் காலங்களில் பல்வேறு சிரமங்களை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். பயிர்ச் செய்கைக்குரிய விவசாய உரங்கள், உள்ளீடுகளை கொண்டு செல்லுதல், நீர்ப்பாசனம் செய்தல் என்பன சவாலாக காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காணப்பட்ட மண் அணைகள் அகற்றப்பட்டு, பயிர்ச் செய்கைக்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தச்சடம்பன் மண் அணை தொடர்பாக இதுவரை எவரும் தெரியப்படுத்தவில்லை. அவ்வாறு தெரியப்படுத்தும் பட்சத்தில் அவற்றை எதிர்காலத்;தில் அகற்றி கொடுக்;க முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .