2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பருப்புக்கடந்தானில் வாயைக் கட்டி ஆடுகளைக் கடத்தியோர் கைது

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில், அதி சொகுசு காரில், இரண்டு ஆடுகளை கடத்திச் சென்ற மூன்று இளைஞர்களை, அடம்பன் பொலிஸார், நேற்று (23) மாலை 6.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், அடம்பன் பகுதியை சேர்ந்த 22, 24 வயதுடையவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சொகுசு காரொன்றில், தொடர்ச்சியாக கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், பருப்புக்கடந்தான் பகுதியில் வைத்து, குறித்த சொகுசு காரை இடை மறித்த சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது, காரின் பின் பகுதியில் இருந்து வாய் கட்டப்பட்ட நிலையில், இரண்டு ஆடுகள் மீட்கப்பட்டன.

இதையடுத்து, குறித்த காரில் பயணித்த 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஆடுகளும் சொகுசு காரும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .