2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

பால் பக்கெற்றுகளை விற்பனை செய்த பாடசாலைக்கு எதிராக விசாரணை

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி நகரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் நிர்வாகத்தால், மாணவர்களுக்கென வழங்கப்பட்ட பால் பக்கெற்றுகள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி நகரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் நிர்வாகத்தால், மாணவர்களுக்கென வழங்கப்பட்ட பால் பக்கெற்றுகள் விற்பனை செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதி பாடசாலைக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களால் வலயக் கல்விப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டில், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பால் பக்கெற்றுகள், உணவுகள் மாணவர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள பெற்றோர், அவ்வாறு வழங்கப்படாது குறித்த பால் பக்கெற்றுகள் விற்பனை செய்யப்பட்டு, பாடசாலைக் கணக்கில் நிதியாக கணக்குக் காட்டுவது பொருத்தமற்றதெனவும் கூறியுள்ளனர்.

இவ்வாறு நடந்து கொள்ளும் பாடசாலைகளின் அதிபர்கள், நிர்வாகங்களுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும், பெற்றோர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டுக்கமைய, இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, வலயக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .