2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பாடசாலை பஸ் சேவை பாதிப்பு

George   / 2016 மே 31 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஜோசப்வாஸ் நகரில் இருந்து மன்னாருக்கு பாடசாலை சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், ஜோசப்வாஸ் நகர வீதியில்  செவ்வாய்க்கிழமை காலை புதையுண்டது.
இதனையடுத்து, பஸ் சேவை தடைபட்டதுடன் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

பஸ் சேவை தடைப்பட்டதையடுத்து, குறித்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று மற்றுமொரு பஸ்ஸில் ஏறி ஏறி மன்னாருக்கு பயணித்தனர்.

குறித்த வீதி நீண்டகாலமாக சீர் செய்யப்படாத நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால், போக்குவரத்தை மேற்கொள்வதில் குறித்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .