Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மே 22 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் வறுமைக்குட்பட்ட 06 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த வாழ்வாதார உதவியானது தனது 2016 பிரமாண அடிப்படையிலான ஒதுக்கீட்டின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு துரைராசா ரவிகரனால் முதற்கட்டமாக கோழிகள் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுயதொழில் ஊக்குவிப்பு முறையிலான வாழ்வாதார மேம்பாட்டு உதவி வழங்கலின் ஒரு கட்டமானது கடந்த 2016.05.20 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கால்நடை மருத்துவர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தலா 10,000 ரூபாய் பெறுமதியிலான இவ்வாழ்வாதார உதவி வழங்கலில் வறுமைக்குட்பட்ட 15 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவற்றின் முதற்கட்டமாக 06 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக இருமாத வளர்ப்பிலான கோழிகள் வழங்கப்பட்டதோடு, பயனாளிகளுக்கான விளக்க ஆலோசனைகள் கால்நடை மருத்துவர்களாலும் பணியாளர்களாலும் வழங்கப்பட்டன.
பயனாளிகளோடு கலந்துரையாடிய வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வாழ்வாதார உதவியில் இரண்டு மாத வளர்ப்பு பெற்றுள்ள கோழிகளே வழங்கப்படுகின்றன. ஆதலால் நோய்த்தொற்று மூலமாக கோழிகள் மரணமடையும் நிலை இயன்றளவில் தவிர்க்கப்படும் என எண்ணுகின்றேன். வழங்கப்படுகின்ற இவ்வாழ்வாதார உதவிகள் மூலம் பயனாளிகள் அனைவரும் முழுமையான பயனை அடைய வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
50 minute ago
53 minute ago