Princiya Dixci / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி வைபவ ரீதியாக இன்று வியாழக்கிழமை (22) காலை திறந்து வைக்கப்பட்டது.
பூநகரி பிரதேச செயலர் ச.கிருஸ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித அபயவர்த்தன மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து புதிய கட்டடத்;தைத் திறந்து வைத்தனர்.
கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் பூநகரி கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச செயலங்களும் நிரந்தரக்கட்டடங்கள் எதுவும் இன்றி தற்காலிக கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் பூநகரி பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடத்துக்கான கட்டுமானப்பணிகள் கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, அண்மையில் அதன் பணிகள் நிறைவு பெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
6 minute ago
11 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
26 minute ago
32 minute ago