2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என.நிபோஜன்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 10ஆம் திகதி   நடத்தவுள்ள போராட்டத்துக்கு தாம் ஆதரவை வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுச்செயலாளர் தி.சிவரூபன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களது விடுதலையை விரைவுபடுத்தக்கோரி கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்போராட்டத்துக்கு, பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த நிலையில் இவர்களது விடுதலை இழுத்தடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பலருக்கு இந்த அரசாங்கம் அவற்றிலிருந்து விடுதலை வழங்கியுள்ளது.

எனவே, அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும். இதற்காக குரல் கொடுக்க அனைத்து பொது அமைப்புக்களும் முன்வர வேண்டும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .