Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 22 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி ஆனந்தபுரம், கனகாம்பிகைக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள புதிய பாலம், கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பாலத்தை பயன்படுத்தும் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உட்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அருகில், ஆனந்தபுரம் கனகாம்பிகைக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதி, ஆற்றினைக் குறுக்கறுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
குறித்த ஆற்றை கடப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த மரப்பாலத்தினை அகற்றி அண்மையில் புதிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலத்தின் இருபக்கமும் வெள்ளநீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
உதயநகர், தொண்டமான்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏ-9 வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் மூன்று கழிவு வாய்க்கால்களினூடாக செல்லும் மழை நீர், குறித்த சிறிய பாலத்தினூடாகவே செல்கின்றது.
இதனூடாக வெளியேறும் நீரின் அளவினை கருத்திற்கொள்ளாது குறித்த பாலம் அமைக்கப்பட்டதால் வெள்ளம் காரணமாக பாலம் சேதமடைந்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிடுவதுடன் பாலத்தை விரைவில் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .