2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மூடப்படும் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மூடப்படும் நிலையில் இருந்த வவுனியா - வெளிக்குளம் பாடசாலைக்கு, புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். 

வெளிக்குளம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் எண்ணிக்கையும் சேர்க்கையும் குறைவாகக் காணப்பட்ட நிலையில், அப்பாடசாலை மூடப்படும் நிலையில் இருந்தது. 

அத்துடன், குறித்த பாடசாலைக்கு, கடந்த ஆறு மாதங்களாக அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருந்தார். 

இந்நிலையில், முருகனூர் சாரதா வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றிய பாஸ்கரமூர்த்தி நேசராஜா, வடமாகாணக் கல்வித் திணைக்களத்தால் குறித்த பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர், ஜனவரி 2ஆம் திகதி, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

கடந்த வருடம் 35 மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்று வந்த நிலையில், புதிய அதிபர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வருடம் புதிதாக 15 மாணவர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .