Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் அமைப்பதற்கென தொடங்கப்பட்ட வீட்டு வேலைகள் அத்திவாரத்துடன் இருப்பதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
கரைதுறைபற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பத்தாண்டுகளுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற நிரந்தர வீடுகள் அத்திவாரத்துடன் காணப்படுகின்றன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக குறித்த வீடுகள் முழுமைப்பெற வேண்டும் என வீட்டுத் திட்டப் பயனாளிகள் பிரதேச செயலகங்களுக்குச் சென்று முறைப்பாடுகள் செய்து வருகின்றனர்.
ஆறு மாதங்கள் தாண்டியும் பல வீடுகள் நிதி வழங்கப்படாததன் காரணமாக அத்திவாரத்துடனேயே காணப்படுகின்றன.
2009ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு முதற்தடவையாக கிடைக்கப்பெற்ற வீடுகளே அத்திவாரத்துடன் காணப்படுகின்றன.
7 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago