2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

‘மணல் அகழ்வுக்கு கனியவளத் திணைக்களம் துணை’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு கனியவளத் திணைக்களமே துணையாக உள்ளதென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கனியவளத் திணைக்களத்திடம் வினாக்கள் எழுப்பப்பட்டபோது ஒழுங்காக பதில்கள் அளிக்கப்படுவதில்லை, கட்டுப்படுத்துகின்றோம் என்ற பதில் கடந்த ஏழாண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஆனால் தொடர்ச்சியாக மரம் வெட்டுதல், சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்வதாகவும் கடந்த ஆட்சியிலும் இது மோசமாக நடைபெற்றதெனவும் நல்லாட்சியிலும் இது தொடர்வதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு கனியவளத் திணைக்களமே துணை போகின்றது என்பது மட்டும் உண்மையென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X