2021 ஜனவரி 23, சனிக்கிழமை

முதிரைக் குற்றிகளுடன் இருவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  காட்டுப் பகுதியில், சட்டத்துக்கு முரணாக வெட்டப்பட்ட முதிரைக் குற்றிகளைக் கடத்த முயன்ற இருவரை, பூநகரி பொலிஸார், இன்று (27) காலை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரைக் குற்றிகள் மீட்கப்பட்டன.

குறித்த முதிரைக் குற்றிகளை, சங்குபிட்டி பாலத்தின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு கடத்த முற்பட்டபோதே, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .