2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக மன்னார் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் நேற்று முன்தினம் (17) மாலை  முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

தங்களுக்கு வழங்கபட வேண்டிய காணிகள் 12 வருடங்கள் கடந்த நிலையிலும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தப்பட்டே, மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தேவன்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த   53 பேர் தங்களுக்கான   விவசாய காணிகளை இன்னும் வழங்கவில்லை என கோரி, பல்வேறு தடவைகள் மாந்தை பிரதேச செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், உரிய பதில் வழங்கப்படாத நிலையிலேயே, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2006 ஆண்டு, 53 நபர்களுக்கு பாலி ஆறு மற்றும் வெள்ளாங்குளம் அருகே அமைந்துள்ள காணிகளை வழங்க கோரி, வட- கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தால் பெயர் விபரங்கள் அடங்கிய அனுமதி வழங்கப்பட்டது.

இருந்த போதிலும், 12 வருடங்கள் கடந்தும் இது வரை மாந்தை பிரதேச செயலகத்தால் தங்களுக்கு எந்த வித காணிகளும் வழங்கப்படவில்லை எனவும் இது வரை எழுத்து பூர்வமான பதில்களும் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தற்போது தாங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் தேவன்பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--